மக்கள் மத்தியில் பணியாற்றுபவர்களை குறிவைத்து ரெய்டு”… * முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு !
திமுக ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி, தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் வீட்டிலும் இன்று(16-09-2026) காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவரை சந்திப்பதற்காக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அங்கு சென்றார். ஆனால், போலீஸார் அவரை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து செல்போனில் பேசிய கே.என்.நேரு, “பாத்துட்டு போறதுக்கு என்னப்பா, நாங்க எடுத்துட்டு போகப் போறோமா, இல்ல வெச்சுட்டு போகப்போறோமா? பாத்துட்டு போகக்கூட விடமாட்றீங்க என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுகவில் மக்கள் மத்தியில் யார் பணியாற்றுகிறார்களோ, அவர்களை குறிவைத்து விஜய் அரசு ரெய்டு மூலமாக பயமுறுத்துகிற பணியை செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பு வாங்குவோம்” என்று தெரிவித்தார்.

Comments are closed.