Rock Fort Times
Online News

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவர்கள் சார்பில் பல் மருத்துவ பரிசோதனை முகாம்…!

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித் துறை இளங்கலை மாணவர்கள் சார்பில், திருச்சி கே.கே.நகரில் உள்ள அகச்சேவி மேல்நிலைப் பள்ளியில் செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான பல் மருத்துவ பரிசோதனை முகாம் 08.09.2026 நடைபெற்றது. முகாமில், பல் மருத்துவர்கள் ஏ.விகாஷ் மற்றும் வி.கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை மற்றும் பல் பராமரிப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இதன்மூலம் மாணவர்களிடையே பல் சுகாதாரம் மற்றும் முறையான பல் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சமூக பணித்துறை பேராசிரியர் லிடியா சூசன் வழிகாட்டுதலின் பேரில் இளங்கலை மாணவர்கள் ஆன தஸ்லீம் பாத்திமா , முகமது இப்ராஹிம், தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்