Rock Fort Times
Online News

தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்க திணறிய அமைச்சர்…!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மற்றும் உறுப்பினர்களின் வினாக்களுக்குப் பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தங்களது தொகுதிகளில் உள்ள திட்டங்கள் குறித்து அடுத்தடுத்துக் கேள்விகளை எழுப்பினர். அதற்குப்
பதிலளித்துப் பேச வேண்டிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, தன்னிடம் இருந்த கோப்புகளைச் சரிபார்த்துத் திக்கித் திணறியபடி பதில்களை வாசித்தார். அமைச்சர் தடுமாறியதை பார்த்த, சபாநாயகர், கோப்புகளில் உள்ள சரியான விவரங்களை எடுத்துக்கூறி அமைச்சரின் பதிலைத் திருத்தி அமைத்து வழிநடத்தினார். இதனால் சட்டப்பேரவையில் சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாத பொருளாகியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்