Rock Fort Times
Online News

கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…!

தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் சன்ன ரக அரிசி கிலோ ரூ. 80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு
தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான முதல் விற்பனை இன்று (17.10.2026) சென்னை, ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள காமதேனு அங்காடியில் தொடங்கி வைக்கப்பட்டது. உணவுதுறை அமைச்சர் பி. வெங்கட்ராமன், கூட்டுறவுத்துறை அமைச்சர் வ. காந்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். சென்னையில் முதல் கட்டமாக 30 இடங்களில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டமானது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் மெட்ரிக் டன் சன்னரக அரிசியை, கூட்டுறவுத் துறையின் 201 அங்காடிகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. பொது மக்களின் தேவைக்கேற்ப ஒருவருக்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்