Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?* திருமாவளவன் எம்பி பேட்டி..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் இன்று(17-10-2026) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் மறைவு மிகுந்த துயரத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தவர் அவர். 75 வயதிலும் புகழுடன் திகழ்ந்தவர். அவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவரது இழப்பு திரையுலகிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

விலைவாசி உயர்வு, 

விலைவாசி உயர்வு ஏழை, எளிய மக்களை வெகுவாகப் பாதிக்கும். குறிப்பாக, அரிசியின் விலை உயரும்போது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. எனவே, மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசும், மாநில அரசும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உலகச் சந்தையில் நிலவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலைவாசி உயர்வுக்கு
காரணமாக இருக்கலாம். தமிழக முதலமைச்சர் விஜய் ஆந்திரா மற்றும் கர்நாடக முதல்வரை சந்தித்து நதிநீர் இணைப்பு குறித்து பேசி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

தண்ணீர் இல்லாத சூழலில் இது குறித்து பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, நதிநீர் இணைப்பு என்பது நீண்ட கால திட்டம். இதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் இயற்கைக்கு எதிராக இருக்கும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுகுறித்து வேண்டுமானால் நாம் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ கருத்து சொல்லலாம். ஆனால் நதிநீர் இணைப்பே கூடாது, இப்போதைக்கு தண்ணீர் இல்லை, ஆகவே இந்த பேச்சுவார்த்தை பயனற்றது என கூறுவது அரசியல் அடிப்படையிலான விமர்சனம். தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அப்படியே நிலைநிறுத்தப்பட வேண்டும். எந்த வகையிலும் அந்த எண்ணிக்கையை அதிகரிப்பது தேசத்தின் நலன்களுக்கும் ஜனநாயகத்திற்கும் உகந்ததல்ல என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா?

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன் என கூறுவது வதந்தி. ஏற்கனவே இடைத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்பதை தெரிவித்து விட்டேன். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் த.வெ.க.நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்