Rock Fort Times
Online News

45 நாட்கள் சிறப்பு பயிற்சியுடன் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸில் வேலை வாய்ப்பு…!

பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய 45 நாட்கள் சிறப்பு பயிற்சி நடைபெறுகிறது. 18 வயது முதல் 35 வயதுடைய ஆண், பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, டிகிரி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் தேர்ச்சியடைந்தவர்களும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் சர்வீஸ் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சியில் கம்யூனிகேஷன் டெவெலப்மென்ட்,வாடிக்கையாளர்களை கையாளும் திறன், அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி, தொழில் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் ஆகியவை இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய விரும்பினால் 73971 24555 / 73970. 48555 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்