Rock Fort Times
Online News

மாநகராட்சிகளில் கோடிக்கணக்கில் ஊழல்?* அமைச்சர்கள் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கடும் எதிர்ப்பு…!

மதுரை மாநகராட்சியில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அந்தத் தொகையை மீட்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என சட்டப்பேரவையில் மதுரை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டி கேள்வி எழுப்பினார். மேலும், மதுரை மாநகராட்சியில் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக சுட்டிக்காட்டினார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,

மதுரை மட்டுமல்லாது அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. கூடிய விரைவில் எந்தெந்த மாநகராட்சியில் எந்தெந்த ஊழல் நடைபெற்றது? என்பதை நாங்கள் வெளிப்படுத்துவோம்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “மதுரை மாநகராட்சியில் கமர்ஷியல் பில்டிங்டில் முறையாக வரி வசூலிக்கப்படாமல் முறைகேடு நடந்துள்ளது. ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் அளவில் வரவேண்டிய வரி வராமல் போயுள்ளது. இதனை ஒரு சில மண்டல தலைவர்கள், மேயர் அளவில் பிரித்துக் கொண்டு போய்விடுகிறார்கள் என்று பேசினார்

இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “முந்தைய ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் மற்றும் மேயர் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. தற்போது அதிகாரமும், காவல்துறையும் உங்களிடம் தான் உள்ளது. எந்த மாநகராட்சியில் தவறு நடந்திருந்தாலும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுங்கள்” எனக் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்