Rock Fort Times
Online News

கொளத்தூர் தொகுதி த.வெ.க.வேட்பாளர் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்…* உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு…!

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் த.வெ.க.வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், த.வெ.க சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி பெற்றவுடன், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்தனர்.

குறிப்பாக வாக்கு பதிவு மையங்களான 1, 17, 28, 32, 75, 78, 79, 84, 87, 112,122 157,170 உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவி பேட், வாக்கு பதிவு எந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பெல் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட என்ஜினீயர் உடன் இருந்தார். 100% விவி பேட் மற்றும் வாக்கு பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் 6 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள், விவிபேடுகளை ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேபோல பல வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக பல வாக்குப்பதிவு எந்திரங்களில் ஹார்டுவேர் என்று சொல்லக்கூடிய மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. எனவே, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேடுகளை சரிபார்க்க வேண்டும். மேலும், த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும், நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்