Rock Fort Times
Online News

திருச்சி, மலைக்கோட்டை பகுதி த.வெ.க. சார்பில் முதியோர் இல்லத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்…!

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல, தமிழக வெற்றிக் கழகம், திருச்சி மாநகர கிழக்கு மாவட்டம், மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில் திருவானைக்காவல், பெரியார் நகர் சாய் நந்தனம் முதியோர் இல்லத்தில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் தமிழ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெஷ்மி நாராயணன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தியதோடு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாவில் முதியோர் இல்ல நிறுவனர் மற்றும் த.வெ.க. திருச்சி மாநகர கிழக்கு மாவட்டம், மலைக்கோட்டை பகுதி செயலாளர் இன்ஜினியர் கி.சதீஷ்குமார், நிர்வாக அறங்காவலர் க.வினிதா சதீஷ்குமார் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்