அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா?…உதயநிதி* முதல்வர் கூட்டும் கூட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்பார்களா?…நிர்மல்குமார்
தமிழக சட்டமன்றத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது விவகாரத்தில் அதிக வேகம் காட்டுகிறது கர்நாடகா. ஆகஸ்ட் 2-ல் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார் கர்நாடக முதல்வர். கர்நாடகம் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 முன்னாள் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்படி கடந்த ஒரு மாதத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு பணிகளை கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுகிறது. அதேபோல தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன. ஆனால்,அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏன் பயப்படுகிறீர்கள் அல்லது ஏன் தயங்குகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளிக்கையில், யாரை பார்த்தும் முதல்-அமைச்சர் விஜய்க்கு பயம் இல்லை. மேகதாது விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஒருமனதாகதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுவரையறை குறித்து அனைத்து எம்.பி.க்கள் கூட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் நாளை(ஆகஸ்ட் 8) கூட்டுகிறார். இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூற வேண்டும் என்றார்.

Comments are closed.