Rock Fort Times
Online News

மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடங்கள், புதிய தாலுகா அலுவலகம் அமைக்க அமைச்சர்களிடம் த.வெ.க எம்எல்ஏ ஆர்.கதிரவன் கோரிக்கை…!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(05-08-2026) சட்டப்பேரவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதற்கான நிதி ஒதுக்கியுள்ளது. இக்கூட்டத் தொடரில் தங்கள் தொகுதிகளின் குறைகளையும், கோரிக்கைகளையும், பல்வேறு எம்எல்ஏக்கள் வலியுறுத்த இருக்கிறார்கள். அந்தவகையில், மணப்பாறை தொகுதி த.வெ.க எம்எல்ஏவான ஆர்.கதிரவன், மணப்பாறையில் இயங்கி வரும் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் நாளுக்கு நாள் பெருகிவரும் நோயாளிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும் வசதியாக, புதிதாக மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்டித்தர வலியுறுத்தி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண் ராஜை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதேபோல, பழைய பில்டிங்கில் இயங்கி வரும் மணப்பாறை தாலுகா அலுவலகத்திற்கு பதிலாக, புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தி வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்