2026-2027ம் நிதியாண்டில் அரசின் வருவாய் ரூ. 3,50,027 கோடி..!* வருவாய் பற்றாக்குறை ரூ. 55,775 கோடி என மதிப்பீடு..!
தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்று தாக்கல் செய்தது. 2026-2027ம் நிதியாண்டில் அரசின் வருவாய் ரூ. 3,50,027 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடியாக இருக்கும் என நிதியமைச்சர் மரியவில்சன் அறிவித்தார். மாநில அரசின் கடன் ரூ.10,98,765 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நிதி நிலைமையை சீரமைக்க குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரையை நண்பகல் 12.33 மணிக்கு நிறைவு செய்தார். இதன் மூலம் முதல் பட்ஜெட்டை அவர் 2.33 மணி நேரம் வாசித்தார்.

Comments are closed.