பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 1,700 கோடி ஒதுக்கீடு…!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று(05-08-2026) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை வாசித்து வருகிறார். அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக வெற்றி தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும். மொத்த திட்ட செலவில் மூலதன மானியம், மொத்த மானியம் பெற ஏதுவாக இந்த பட்ஜெட்டில் ரூ. 72 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்காக ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் ‘மண்ணின் மகள்’ திட்டம் செயல்படுத்தப்படும். பயனாளிகளுக்கு விவசாயம் செய்ய தேவையான நவீன பயிற்சி வழங்கப்படும். இந்த பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாடு திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- பழங்குடியினர் குடியிருப்புகளை மேம்படுத்த ‘ஆன்றோர் மேம்பாட்டு திட்டம்’ செயல்படுத்தப்படும். இதன்கீழ் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இந்த பட்ஜெட்டில் சமூகநீதி துறைக்கு ரூ. 3,937 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சிறுபான்மையினர் நலன்
- தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் முதன்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் ரூ.25,000 மானியம் இனி ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும்.
- கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் ரூ.105 கோடி ஒதுக்கீட்டில் கூடுதலாகத் துவக்கப்படும்.
- கபர்ஸ்தான்கள், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக ரூ. 34 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.