தமிழக சட்டப்பேரவைக்குள் வரவே தகுதியற்றவர் உதயநிதி… மு.க.ஸ்டாலின் கருத்துக்கு த.வெ.க அமைச்சர்கள் பதிலடி..!
தமிழக பட்ஜெட் நாளை( ஆகஸ்ட் 5) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சட்டமன்றத்துக்குள் வரவிடாமல் தடுக்கவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு த.வெ.க. அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உதயநிதி ஸ்டாலின் பேசியதை திமுகவினர் தங்களது வீடுகளில் போட்டுக் காட்டட்டும். அவர் பேசியதில் ஒரு வார்த்தையாவது ஏற்புடையதாக இருக்கிறதா?” என்று சொல்லட்டும். உதயநிதிக்கு எதிர்க்கட்சி தலைவராக இல்லை, எம்எல்ஏவாக இருக்கக் கூட தகுதி இல்லை. பெண்கள் பற்றி இவ்வளவு வக்கிரமான எண்ணங்களை வைத்துள்ளார். சட்டப்பேரவைக்குள் வரவே உதயநிதிக்கு தகுதி இல்லை. ஜெயலலிதாவைப் பற்றியே உதயநிதி அவதூறாக பேசியிருக்கிறார். பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், “சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என நினைத்து உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தவெக அரசு பொறுத்துக் கொள்ளாது. அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். அதை தவிர்த்து, அரசியல் பேசுகிறேன் என்ற பெயரில் பெண்களை தவறாகப் பார்க்ககூடாது. எனக் கூறினார்.

Comments are closed.