‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு ராகுல் காந்தி எம்பி ஆதரவு தெரிவித்ததோடு அவர்களோடு இணைந்து பிரதமர் வீட்டை முற்றுகையிட பேரணியாக சென்றார். அப்போது போலீசார் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர்.ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில்
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது தொடர்பாகவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஜூலை 22) விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது, பட்டியலிட்டு தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தடியடி சம்பவம் தொடர்பான வீடியோக்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, “இந்த வீடியோக்களை பார்க்க எங்களுக்கு நேரமும் இல்லை, பார்க்க விரும்பவும் இல்லை. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள்” என தெரிவித்து அவசர விசாரணை கோரிக்கையை நிராகரித்தது.

Comments are closed.