Rock Fort Times
Online News

மோடி பதவி விலகக் கோரி பிரதமர் வீடு முன்பு ராகுல் காந்தி எம்.பி. ‘தர்ணா’…!

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி எம்.பி. போராட்டத்தில் குதித்துள்ளார். அவர் பிரதமர் மோடி வீட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் மோடி பதவி விலக கோரி பிரதமர் வீடு முன்பு ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதுபற்றி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “நேற்று இளம் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைச் செயல்கள் குறித்துப் பதிலளிக்கக் கோரி, நாங்கள் பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றோம். இவ்விவகாரத்தில் எந்தப் பொறுப்பையும் ஏற்கவோ அல்லது நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவோ அரசு விரும்பவில்லை. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும். உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்