எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க ஊழியர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, டி.ஆர்.இ.யு சங்கத்தின் பொதுச் செயலாளர் பேபி ஷகிலாவைக் கண்டித்து, திருச்சி, பொன்மலை ஆர்மரிகேட் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் இன்று( ஜூலை 20) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்.ஆர்.எம்.யூ அமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க ஊழியர்களை அவதூறாகப் பேசிய டி.ஆர்.இ.யு பொதுச்செயலாளர் பேபி ஷகிலாவின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர் தனது பேச்சுக்காகத் தொழிலாளர்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், எஸ்.ஆர்.எம்.யூ. அமைப்பைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.