Rock Fort Times
Online News

டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு…!

‘நீட்’ தேர்வு முறைகேடுகள், தொடர்ச்சியான வினாத்தாள் கசிவு உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக, இன்று (ஜூலை 20) நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இந்தப் பேரணியில் ஆயிரக் கணக்கானோர் சென்றனர். அப்போது, டெல்லி காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர், பேரணி செல்ல முயன்றவர்கள் மீது தடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. தடியடிக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு வருமாறு கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால், பேச்சுவார்த்தையில் சரியான தீர்வு எட்டப்படாததால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி சென்று கொண்டிருந்ததால், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான நுழைவு வாயில் பூட்டப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்திற்கு செல்லும் சாலையில் பேரணியாக சென்றவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய துணை ராணுவப் படையினர் கூட்டத்தை கலைத்தனர். எனினும், அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்