தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரின் துணைவியார் தனலட்சுமி அம்மையார் 27-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி…!
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசனின் துணைவியார் சீ.தனலட்சுமி அம்மையாரின் 27ம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஜூலை.20 ) அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமையிலான குடும்பத்தினர் அம்மையாரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவன் – அனந்த லட்சுமி கதிரவன், ஜெயந்தி – நீல்ராஜ், ஆனந்தி – ராஜபூபதி, சுகந்தி – மணி உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.