தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஜூலை 18 அன்று திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து பேசியதாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக, “இவ்வளவு கேவலமான முதலமைச்சரை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய வரலாறே பெற்றது கிடையாது. சட்டசபையில் உங்க அப்பாவை தேடிக் கொண்டிருக்கிறேன், என முன்னாள் முதலமைச்சரை விமர்சிக்கிறார். இதுபோன்ற ஒரு பேச்சை நான் எங்கேயும் கேட்டது இல்லை. விஜய் எங்களை கோமாளி என நினைக்கிறாரா? சட்டசபைக்குள் வைத்துப் பார்த்து கொள்கிறோம்” என்று கூறினார். முதல்- அமைச்சரை மிரட்டும் தொனியில் பேசிய எம்எல்ஏவின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து
தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் தூத்துக்குடி மாவட்டn குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், இன்று( ஜூலை 20) அதிகாலையிலேயே எம்எல்ஏவின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயனை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.