Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு…!

திருச்சி மாநகர் மாவட்ட கலைப்பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.திருநாவுக்கரசு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அப்பாக்குட்டி என்கிற எம்.அப்துல் ரகுமான், ஏ சிராஜுதீன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.தினேஷ், காஜாமலை பகுதி கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.கலைவாணன், எடத்தெரு வடக்கு பகுதி கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.வாசுதேவன், பாலக்கரை தெற்கு பகுதி 31 வது வட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.டி.தங்கராஜ், காஜாமலை பகுதி 58வது வட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜெ.கமலஹாசன், எடத்தெரு வடக்கு பகுதி 49 ஏ வட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.டி.மலையப்பன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

நியமனம்,

திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளராக கே. டி .தங்கராஜ், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக ஏ.சிராஜுதீன், மாவட்ட கலை பிரிவு செயலாளராக ஆர். தினேஷ், புத்தூர் பகுதி கழக செயலாளராக எஸ். திருநாவுக்கரசு, காஜாமலை பகுதி கழக செயலாளராக ஜெ.கமலஹாசன், எடத்தெரு வடக்கு பகுதி கழக செயலாளராக என்.டி. மலையப்பன், பொதுக்குழு உறுப்பினராக எம்.அப்துல் ரகுமான் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்