தமிழக முன்னாள் முதல்- அமைச்சர், மறைந்த காமராஜர் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக இன்று(15-07-2026) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடுதலைப் போராட்டத்தின் தலைசிறந்த போராளி, சிறந்த மக்கள் தலைவர் காமராஜர். தனது வாழ்நாள் முழுவதும் தேச கட்டமைப்புக்காக அர்ப்பணித்த காமராஜரை நினைவுகூர்கிறேன். கல்வி, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஏழை மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவர் காமராஜர். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.