Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், மணிகண்டம் பகுதியில் நாளை (ஜூலை 14) மின் தடை…!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் எம் .கணேசன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், திருச்சி கிழக்கு கோட்டம், மணிகண்டம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை தென்றல் நகர், நாகமங்கலம், ஆலம்பட்டி, எசனப்பட்டி, முடிகண்டம், மணிகண்டம், பாகனூர், நேருஜி நகர், செங்குறிச்சி, தீரன்மாநகர் மலர்நகர், மேக்குடி, மாத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்