தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நாளை (10-07-2026) கரூர் செல்கிறார். கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்காக கலையரங்க மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர், மணவாசி பகுதியில் ரூ.1,700 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
முதலமைச்சர் விஜய், கரூரில் நாளை 10 கி.மீ. ரோடுஷோ செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூருக்கு முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முதலமைச்சரின் வாகனம் செல்லும் வழி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments are closed.