Rock Fort Times
Online News

அமைச்சரவை கூட்டத்தில் அந்த 2 பேருக்கு என்ன வேலை? ஆளுநரை சந்தித்து முறையிட்ட பாஜக…!

சென்னை, கிண்டியில் உள்ள மக்கள் பவனில் தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் இன்று(04-07-2026) சந்தித்துப் பேசினர். அப்போது தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், மாணவிகளிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத தனிநபர்கள் ஜான் ஆரோக்கியசாமியும், விஷ்ணு ரெட்டியும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறோம். அதுமட்டும் அல்லாமல், இந்த அரசு பொறுப்பேற்று 54 நாட்களில், 151 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 85-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்திருக்கின்றன. கடந்தகால திமுக அரசுக்கும், இந்த அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கிறது. முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் என்று மனு மூலமாக தெரிவித்திருக்கிறோம். தவெக கட்சியினரே தவறு செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆளுநர் எந்த வகையிலும், தமிழ்நாடு அரசின் அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. தவெகவுக்கு பின்புலத்தில் நாங்கள் இல்லை. அப்படி இருந்தால் அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்