Rock Fort Times
Online News

ஆட்சி அதிகாரம் இல்லாமல் திமுகவால் இருக்க முடியவில்லை”: மா.கம்யூ சண்முகம் தாக்கு..!

திமுகவின் செயல்பாடுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். கோவை செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பேசு
பொருளாகியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி “விரைவில் தேர்தல் வரும்” என்று கூறிவருவது தற்போதைய அரசியல் சூழலை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைச் சீர்குலைப்பதற்கும், அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களை வளைப்பதற்கும் திமுக தரப்பில் தீவிர முயற்சிகள் நடக்கின்றன. மக்கள் ஜனநாயக ரீதியாக அளித்த தீர்ப்பை மதிப்பதற்குப் பதிலாக, பணம் கொடுத்து எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் “குதிரை பேரம்” போன்ற செயல்களில் திமுக
ஈடுபடுகிறது. ஆட்சி அதிகாரம் இல்லாமல் திமுகவால் இருக்க முடியவில்லை போல. அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல அக்கட்சி தயாராக இருப்பதாகவே தோன்றுகிறது. இது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது. எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுவது மற்றும் ஆட்சியை ஸ்திரமிக்கச் செய்யும் செயல்களைத் தாங்கள் ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும், இத்தகைய அரசியல் குறுக்கு வழிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
தமிழக அரசியலில் தற்போதைய அதிகாரப் போட்டி மற்றும் எம்.எல்.ஏ-க்களின் அணி தாவல் விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணியில் இருந்து கொண்டே கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் மீது இத்தகைய நேரடித் தாக்குதலைத் தொடுத்திருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்