திருச்சி மத்திய பேருந்து நிலையம், வில்லியம்ஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது, விஜய் மெஸ். பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் தரமான சைவ மற்றும் அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்டு வருகிறது. இதனால், இந்த உணவகத்திற்கு என ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த மெஸ்சின் உரிமையாளர் திருச்சி, வ. உ. சி. தெருவை சேர்ந்த என்.விஜய கிருஷ்ணன்-வி.தீபா தம்பதியரின் மகள் வீ.கல்யாணி என்கிற சுபிக்ஷாவிற்கும், திருச்சி பீமநகரை சேர்ந்த எம்.வீரராகவன்- வி. மணிமொழி தம்பதியரின் மகன் வி.கிஷோருக்கும் திருமணம் செய்வதாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இந்த திருமணம் திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சொசைட்டி சூப்பர் டீலக்ஸ் திருமண மண்டபத்தில் வருகிற ஜூலை மாதம் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:33 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் நடைபெறுகிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை மணமகள் மற்றும் மணமகன் வீட்டார், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Comments are closed.