Rock Fort Times
Online News

வருகிற ஜூலை, இரண்டாவது வாரத்தில் முதல்வர் விஜய் கரூர் செல்ல திட்டம்…!

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூர், வேலுச்சாமிபுரத்தில் விஜய் பேசிக் கொண்டிருக்கையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது உடனடியாக சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற விஜய், இறந்தவர்களின் குடும்பங்களை மகாபலிபுரம் வரவழைத்து தனியார் விடுதியில் வைத்து துக்கம் விசாரித்து ஆறுதல் கூறியிருந்தார். அதோடு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்கியதோடு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். இந்தநிலையில் தவெக தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துவிட்ட நிலையில், முதல்வர் விஜய் எப்போது கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கப்போகிறார்? எனும் கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில் வருகிற ஜூலை இரண்டாம் வாரத்தில் முதல்வர் விஜய் கரூருக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அத்தனை குடும்பத்தினரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்