Rock Fort Times
Online News

இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!

இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் இன்று(27-06-2026) காலமானார். அவரது மறைவுக்கு திரை உலகினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில்
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “மூத்த தமிழ்த் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜ் மறைவு, சினிமா உலகிற்கு ஒரு பெரும் இழப்பாகும். அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணி, படைப்பாற்றல் மற்றும் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு ஆகியவை ரசிகர்களின் இதயங்களில் அவருக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. அவரது மரபு, தலைமுறை தலைமுறையாகத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்