Rock Fort Times
Online News

திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து…!

தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு, கடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல டெண்டர்களை ஆய்வு செய்து வருகின்றனர். அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட மல்டி லெவல் கார் பார்கிங் போன்ற சில டெண்டர்களை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில், சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் இயக்குவதற்காக 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் மின்சார பேருந்துகள் வாங்க கோரப்பட்ட டெண்டரால் நிதி இழப்பு ஏற்படும் என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜூன் 18 ம் தேதி டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜெர்மன் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் 625 மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்