இன்றைய சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “எங்களுக்கு வழங்கப்பட்ட வரைவு தீர்மானத்தை மட்டுமே அதிமுக ஆதரிக்கிறது. முன்மொழியப்படாமல், இடையில் சேர்க்கப்பட்ட புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தங்களுடன் கூடிய தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்று தெரிவித்தேன். மேலும், “உரிமைப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்ப எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை விதியின் கீழ் உரிமைப் பிரச்சினை ஒன்றை அவையின் கவனத்திற்கு கொண்டுவர அதிமுக சார்பில் அனுமதி கோரியிருந்தோம். இதுதொடர்பாக எங்களது கொறடா பேரவைத் தலைவரின் அறையிலேயே கடிதம் வழங்கியிருந்தார். ஆனால், ‘பூஜ்ய நேரத்தில்’ (Zero Hour) அந்த விவகாரத்தை எடுத்துக்கொள்ள பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். எங்களுக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தினாலேயே நாங்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்” என்று தெரிவித்தார். சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்யும்போது எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ரவி மனோகர், ராகேஷ் வெளிநடப்பு செய்யவில்லை. இதன்மூலம் சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் இரு பிரிவாக செயல்படுவது தெரிய வந்துள்ளது.

Comments are closed.