அதிமுக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு ஆட்சேர்க்கைக்கு லஞ்சம் பெற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. பின்னர் அவர் திமுகவில் இணைந்து அமைச்சரானார். தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மீதான லஞ்ச ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது மட்டுமின்றி, மின் வாரிய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளன. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கும் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டுக்கு இன்று (ஜூன் 20) கரூர் போலீசார் சென்றனர். அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு போலீசார் திரும்பி சென்றனர். எந்த வழக்கிற்காக விசாரணை நடத்த வந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. இவரது சகோதரர் அசோக்கை போலீசார் தேடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.திமுக ஆட்சிக்காலத்தில் இந்த ஊழல் வழக்குகளில் விசாரணை நடத்துவதற்கு போலீசார் ஆர்வம் காட்டவில்லை. நீதிமன்ற உத்தரவுகளின்படி பெயரளவுக்கு மட்டும் விசாரணை நடந்தது.
இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் செந்தில் பாலாஜி மீதான லஞ்ச ஊழல் வழக்கு வேகமெ டுத்துள்ளது.

Comments are closed.