Rock Fort Times
Online News

திருமண மண்​டபங்​கள் உட்பட ரூ.245 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகள் ரத்து: அறநிலையத்துறை அறிவிப்பு…!

இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் கீழ் அறிவிக்​கப்​பட்​டு, பல்​வேறு காரணங்​களால் தொடங்​கப்​ப​டா​மல் இருந்த ரூ.245.85 கோடி மதிப்​பிலான 46 கட்​டு​மானப் பணி​களுக்​கான நிர்​வாக அனு​ம​தியை ரத்து செய்து அறநிலை​யத்​ துறை உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத்​ துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​ குறிப்பில், அறநிலை​யத் துறை சார்​பில் திருமண மண்​டபங்​கள், வணிக வளாகங்​கள் கட்ட வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பு​கள் நீதி​மன்ற தடை​யாணை காரண​மாக​வும், சம்​பந்​தப்​பட்ட கோயில்​களின் நிதிச்​சுமையை கருத்தில் ​கொண்​டும் தற்​போது சில நடவடிக்​கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்​படி, ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டு, தற்போது வரை தொடங்​கப்​ப​டாத ரூ.115.77 கோடி மதிப்​பீட்​டிலான 29 திருமண மண்​டபங்​கள் கட்டும் பணி​கள் மற்​றும் ரூ.130 கோடி மதிப்​பீட்​டிலான 17 வணிக வளாகங்​கள் கட்​டும் பணி​கள் என மொத்​தம் ரூ.245.85 கோடி மதிப்​பீட்​டிலான 46 பணி​களுக்கான நிர்​வாக அனு​ம​தி​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த நிதியை கொண்டு கோயில்​கள் மற்​றும் பக்​தர்​கள் பயன்​பெறும் வகை​யில் புதிய திட்​டங்​கள் அறிவிக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்