Rock Fort Times
Online News

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புதிய இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ் நியமனம்…!

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகச் செயல்பட்டு வந்த அருண் ஐபிஎஸ், கடந்த ஜூலை மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், மகேஸ்வரி ஐபிஎஸ்-க்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. இருப்பினும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழுநேர இயக்குநர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ்-ஐ நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு அவர் தாம்பரம் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்தார். சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஐபிஎஸ், தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்