Rock Fort Times
Online News

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ‘போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்…!

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான போதையில்லா இளைய சமுதாயம் என்னும் உயரிய நோக்கத்தின் கீழ் “போதைப் பொருளுக்கு நோ-வாழ்க்கைக்கு எஸ்’ (SAY NO TO DRUGS YES TO LIFE) என்ற தலைப்பின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சுருத்தரங்கம் இன்று (09-10.2026) காலை 11-30 மணியளவில் கல்லூரியின் வணிகவியல் கருத்தரங்க
கூடத்தில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ்.எஸ்.சையது அபுதாஹிர் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஆர்.ஜாகீர் ஹுசைன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, மாணவர்களிடையே ஒழுக்கமும், விழிப்புணர்வும் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெரும் பலமாக அமையும் என்பதை வலியுறுத்தினார். சிறப்பு விருந்தினராக திருச்சி, கே.கே.நகர் காவல் உதவி ஆணையர் கென்னடி கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார் . அவர் தனது உரையில், இன்றைய இளைஞர்கள் தான் நாட்டின் தூண்கள்.
போதைப்பொருள் பழக்கம் ஒரு தனிநபரின் வாழ்க்கையை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும், சமுதாயத்தையும் சீரழிக்கும் ஆற்றல் கொண்டது.
மாணவர்கள் தவறான வழிகாட்டல்கள் மற்றும் போதை பழக்கங்களிலிருந்து தங்களை விலக்கி வைத்துக்கொண்டு தங்களின் ஆற்றலை நாட்டின் வளரச்சிக்கும், எதிர்கால உயர்வுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று பேசினார்.

இக்கருத்தரங்கில் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் அ.கா.காஜா நஜுமுதீன், பொருளாளர் எம்.ஜே.ஜமால் முகமது, துணை செயலாளர் க. அப்துஸ் சமத், மதிப்புறு இயக்குநர் கா.ந.
அப்துல் காதர் நிஹால், துணை முதல்வர் எ.ஜே ஹாஜா மொஹிதீன், கூடுதல் துணை முதல்வர்கள் அ.ஜாபர் அகமது, எஸ். நாகூர் கனி மற்றும் விடுதி நிர்வாக இயக்குநர் கா.ந.முகமது பாசில் மற்றும் பகுதி ஐந்து ஒருங்கிணைப்பாளர் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு ஊமை நாடகத்துடன் தொடங்கிய நிகழ்வு போதை இல்லா வளமான நாட்டை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். மருத்துவ ஆலோசனை மையம் , மனநல ஆலோசனை மையம், ஊட்டச் சத்துத்துறை சார்பாக உடல் நலம் பேணல் குறித்த காட்சிப்படுத்தி ஆலோசனையும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரமும் நடைபெற்றது. நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பா.சிராஜுதீன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முகமது சாகித், முகமது சாதிக்,
ஷாஜகான் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதியேற்றுக் கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்