கல்லீரல் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்…* இலவச பரிசோதனைக்கு திருச்சி ஸ்வேதா சிறப்பு மருத்துவமனை அழைப்பு!
திருச்சி, தில்லைநகர் 11வது கிராசில் ஸ்வேதா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் அனைத்து விதமான நோய் பாதிப்புகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற ஜூன் 17ம் தேதி இம்மருத்துவமனையில் இலவச கல்லீரல் பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது. கல்லீரலின் ஆரோக்கியத்தை துல்லியமாக மதிப்பிட பயன்படும் எளிய வலியற்ற செயல்முறையான இந்த கல்லீரல் பரிசோதனையை பொதுமக்கள் செய்து கல்லீரல் தொடர்பான நோய்களை ஆரம்ப காலத்திலேயே அறிந்து பயனடையுமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் கொழுப்பு, சிரோசிஸ், கல்லீரலில் ஏற்படும் இதர அலர்ஜிகள், கிருமிகளால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள், உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதாக உணர்பவர்கள் இந்த பைப்ரோ ஸ்கேன் எனப்படும் கல்லீரல் பரிசோதனையை இலவசமாக செய்து கொள்ள முடியும். நாளை மறுதினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.