Rock Fort Times
Online News

ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவு வைப்பு…!

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15ம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வந்தது. தற்போது, தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 15ம் தேதியான இன்று மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு குறித்து முதல்-அமைச்சர் விஜய் கடந்த மாதம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. தவெக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 வழங்கப்படும் என தேர்தலின்போது விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை கடந்த மாதம் 15-ந் தேதி வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு அவர்களின் வங்கி கணக்குகளில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்