திருச்சி தில்லை நகர் மற்றும் உறையூர் சாலைகளை கோட்டை ஸ்டேஷன் சாலையோடு இணைத்து பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் திருச்சி மாநகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து புதிய பாலம் கட்ட முடிவு செய்தது. அதன்படி, ரூ. 34.10 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இந்த பாலப் பணிகளை மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் இன்று( ஜூன் 11) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன் மற்றும் மாமன்ற உறுப்பினர் விஜயாஜெயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மேயர் அன்பழகன் கூறுகையில், மாரிஸ் பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 70 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மற்ற பணிகளையும் விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . பால பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

Comments are closed.