திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் lll மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் ll ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த துணை மின் நிலையத்தில் நாளை(09.06.2026) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் lll மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் ll ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர், சிவா நகர் , ஆனந்தம் நகர், ரெயின்போ நகர், தில்லைநகர், அண்ணாநகர், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யகொண்டான் திருமலை, விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம்.நகர் மற்றும் திருவெறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர், விவேகனந்தர் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 10.06.2026 ஒருநாள் இருக்காது. 11.06.2026 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.