Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்…!* கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மேயர் அன்பழகன் உத்தரவு!

திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று( ஜூன் 8) நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் வீர் பிரதாப்சிங், மண்டல தலைவர்கள் துர்காதேவி, ஜெயநிர்மலா, விஜயலட்சுமி கண்ணன். நகரப் பொறியாளர் அண்ணாதுரை, நகர்நல அலுவலர் கார்த்திகேயன்
மற்றும் செயற் பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்