Rock Fort Times
Online News

திருச்சி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு ‘வலை’…!

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் ஒரு கடிதம் வந்தது. அதில் இன்று(ஜூன் 8) நண்பகல் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நீதிமன்ற ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நவீன கருவிகளுடன் வருகை தந்து நீதிமன்ற வளாகங்கள் முழுவதும் அங்குலம், அங்குலம் ஆக சோதனை மேற்கொண்டனர். இரு சக்கர வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. யாரோ மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும், அதற்கு முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்