Rock Fort Times
Online News

பொக்லைன் ஆபரேட்டரை தாக்கிய தவெக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்…!

சென்னை, தாம்பரம் பீர்க்கன்கரணை அருகே புத்தர் நகர் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உடைக்கப்பட்டு அதன் செங்கற்கள், ஜல்லி உள்ளிட்டவை லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதிக்கு வந்த தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு வட மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெய் என்கின்ற ஜெய் கிருஷ்ணன், கட்டிடம் உடைத்துக் கொண்டிருந்த பொக்லைன் ஆபரேட்டரிடம் தனக்கு ஒரு லாரி செங்கல் மற்றும் உடைக்கப்பட்ட கட்டிட ரப்பீஸ் வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது பொக்லைன் ஆபரேட்டர், நான் தொழிலாளி மட்டுமே  கட்டிட உரிமையாளர் வருவார் அவரிடம் பேசிக் கொள்ளுங்கள் என கூறியதாக தெரிகிறது. இதனால், கோபம் அடைந்த ஜெய் கிருஷ்ணன் தனது தவெக கட்சி ஆட்களை வரவழைத்து பொக்லைன் ஆபரேட்டர் மற்றும் கட்டிட உரிமையாளரை சரமாரியாக தாக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைப் பார்க்கும் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில்
செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் அவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்