Rock Fort Times
Online News

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்…!

தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி நியமிப்பது தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையம் இன்று ( மே 26) ஆலோசனை மேற்கொண்டது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறைச் செயலாளர் மணிவாசன் பங்கேற்றனர். தமிழக அரசு பரிந்துரைத்த 3 பேர் கொண்ட பட்டியல் அனுப்பப்பபட்ட நிலையில் அதற்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மூவரில் ஒருவர் தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கப்பட உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்