திரைப்படம் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்: மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பம்… உதயநிதி கேள்வி..!
தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல்துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் வேதனை அளிக்கிறது. போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துக் கூறியதாகத் தெரிவிக்கப்படுவது நெஞ்சை உலுக்குகிறது. காவல் மரணங்கள் நடைபெறும் போது, துறைக்குப் பொறுப்பான முதல் அமைச்சர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.