திருச்சி மாவட்ட எஸ்.பி.செல்வ நாகரத்தினம் மாற்றம்… * புதிய எஸ்.பி.ஆக டோங்க்ரே பிரவீன் உமேஷ் நியமனம் !
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக செல்வ நாகரத்தினம் பதவி வகித்து வந்தார். அவர் இன்று (மே 22) திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக பணியாற்றி வந்த டோங்க்ரே பிரவீன் உமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016-ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற இவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிற்சி நிலை உதவி காவல் கண்காணிப்பாளராகவும், மாவட்டத்தில் உதவி கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர், கடந்த 2019-ல் ஆளுநரின் முதன்மை பாதுகாப்பு அலுவலராக பணியாற்றியுள்ளார். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

Comments are closed.