தவெக அமைச்சரவையில் நாமக்கல் மாவட்டத்திற்கு 3 அமைச்சர்கள் பதவி அளிக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற அருண்ராஜ் ஏற்கெனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக உள்ள நிலையில், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் மேலும் 2 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது குமாரபாளையத்தில் வெற்றி பெற்ற விஜயலெட்சுமி, ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர்.
இதன்மூலம் ஒரு மாவட்டத்திற்கு 3 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில்
ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், தமிழக வெற்றிக் கழகம் பரமத்தி வேலூரை தவிர்த்து 5 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற அருண்ராஜ் ஏற்கனவே அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். தற்போது மேலும் 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.