Rock Fort Times
Online News

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: 94.31% சதவீதம் பேர் தேர்ச்சி…!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வெழுதிய மாணாக்கர்களில் 94.31 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள் முடிவுகளை www.tnresults.nic.in, https://www.dge.tn.gov.in/, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களின் வழியாக அறிந்து
கொள்ளலாம். அவர்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு மதிப்பெண்கள் அறிந்து
கொள்ளலாம். இவைமட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் Hi என மேசேஜ் அனுப்ப வேண்டும். அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்