Rock Fort Times
Online News

தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- ரகசியம் உடைத்த சி.வி.சண்முகம்…!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் உட்கட்சி மோதல் தலை தூக்கி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. அந்தவகையில் இபிஎஸ் தலைமைக்கு 22 எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணிக்கு 25 எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. அதோடு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட 28 மாவட்ட செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கினார். இதன் காரணமாக அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று(மே 19) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பதவிக்காக சிலர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள் என்று பேசி உள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக எதிர்ப்பு அணியை சேர்ந்த சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக தொடர் தோல்வியை பெற்றுள்ளது. வாக்கு வங்கி சரிவை நோக்கி சென்றுள்ளது. இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும். அதிமுகவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு வரவேண்டும். இளைஞர்களை இயக்கத்தில் இணைத்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், அனைத்தையும் இபிஎஸ் நிராகரித்தார். செவி கொடுக்க மறுத்தார். அடுத்ததாக தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க மறுத்த காரணத்தால், விலகியவர்கள் சேர்க்க மறுத்த காரணத்தால். வலிமையான கூட்டணியை உருவாக்காத காரணத்தால் தோல்வி அடைந்துள்ளோம். தவெகவுடன் கூட்டணி வையுங்கள் என கூறினோம். கூட்டணி அமைந்து விடக்கூடாது என பல நிபந்தனைகளை விதித்தார். கூட்டணி அமையக்ககூடாது என்பதற்காக எப்படியெல்லாம் பேச வேண்டுமோ அப்படியெல்லாம் பேசி தவெகவை வெளியேற்றினார். அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. பொதுக்குழுவை கூட்டுங்கள், விவாதிப்போம், கலந்தாலோசிப்போம் அங்கு என்ன முடிவெடுத்தாலும் தலைவணங்கி ஏற்றுக்
கொள்கிறோம். பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டாம் என மிரட்டி பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. கையெழுத்து போட மறுத்தால் பதவி பறிக்கப்படும் என அச்சறுத்தி மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. இப்படி அச்சுறுத்தி வைத்தால் கட்சி எப்படி வளரும்.
அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்