Rock Fort Times
Online News

தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் – அமுதாவுக்கு புதிய பொறுப்பு…!

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே பல்வேறு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று (மே 18) தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 17 பேரை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.

* கூடுதல் முதன்மைச் செயலாளர் கிராமப்புற மற்றும் பஞ்சாயத்து துறை ககன்தீப்சிங் பேடி ஐஏஎஸ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் விநியோக துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* கூடுதல் முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் பணியிடம் மாற்றப்பட்டு கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் துறையின் கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதாப் சாஹு பணியிடம் மாற்றப்பட்டு நீர்வள ஆதாரங்களின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலாளர் சுன்சொங்கொம் ஜதக் சிரு பணியிடம் மாற்றப்பட்டு பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அனில் மேஷ்ராம் ஐஏஎஸ் பணியிடம் மாற்றப்பட்டு எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* அயலகத் தமிழர் மறுவாழ்வு துறை ஆணையர் வள்ளலார் ஐஏஎஸ் பணியிடம் மாற்றப்பட்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையின் செயலாளராக கே.எஸ்.பழனிசாமி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின துறையின் செயலாளராக தட்சிணாமூர்த்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறையின் செயலாளராக சஜ்ஜன்சிங் சவன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* கிராமப்புற மற்றும் பஞ்சாயத்துறை செயலாளராக பிரசாந்த் வத்னேரே ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

*பதிவுத்துறையின் ஐஜியாக அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

*நிதித்துறையின் இணைச் செயலாளராக லட்சுமிபதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

*சென்னை மாநகராட்சி குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் ஆணையராக ஆனந்த் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

*சென்னை மாநகராட்சி ஆணையராக ஜி.எஸ்.சமீரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

*தமிழ்நாடு மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

*குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய மேலாண் இயக்குனராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

*சென்னை மாநகர வளர்ச்சி குழும செயலாளராக ராகுல்நாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்