தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று(14-05-2026) 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- உளவுத்துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி ஐபிஎஸ், சைபர் கிரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- வேலூர் சரக டிஐஜி டாக்டர் தர்மராஜன் சென்னை நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தெற்கு மண்டல சட்டம்- ஒழுங்கு இணை ஆணையர் பாகேர்லா செபாஸ் கல்யாண் உள்நாட்டு நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக மாற்றம்.
- திருநெல்வேலி சரக டிஐஜி பி.சரவணன் சிஐடி நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக நியமனம்.
- திருவாரூர் எஸ்பி கராட் கருண் உத்தர்வாவ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக மாற்றம்.
- தென்காசி எஸ்பி மயில்வாகனன் சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம்.
- தூத்துக்குடி எஸ்பி டாக்டர் மதன் பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக மாற்றம்.
- க்யூ பிராஞ்ச் சிஐடி எஸ்பி சண்முகம் போலீஸ்- 2 சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம்.
- மெட்ரொ மண்டல குற்றப்பிரிவு சிஐடி எஸ்பி மாதவன் போலீஸ்- 2 பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம்.
- சட்டம், ஒழுங்கு உதவி ஐஜி சிலம்பரசன்,
சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.